பழனி அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேதர் நடராஜபெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், நெய், இளநீர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து பட்டாடைகள், நகைகள், வண்ண மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சோடச தீபாராதனை மற்றும் உபச்சாரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சிவன் பாடல்களை பாடினர். மகாதீபாராதனையை தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அபிஷேக பூஜையின் போது நால்வருக்கும் அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது.
ஆடி திருமஞ்சனத்தை தொடர்ந்து அருள்மிகு நடராஜ பெருமாள் சிவகாமி அம்பாளுடன் நான்கு ரத வீதி உலா எழுந்தருளினார்.நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.