விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள ஐந்து அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமான கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலை சின்னக்காமன்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இது நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அறைகளின் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை வழக்கம்போல் பணி செய்ய தொடங்கிய நிலையில் உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த வெடிவிபத்தினால் ஐந்து அறைகள் தரைமட்டமாகின இந்த வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த பட்டாசு வெடி விபத்து மீட்பு பணியில் சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
மீட்பு பணியின் போது, மேலும் சில சடலங்கள் கைப்பற்றிய நிலையில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியாகியதாக தெரியவருகிறது. மேலும் மருத்துவமனைக்குச் சென்ற ஒருவரும் பலியாகிய நிலையில் வலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
இரண்டு பெண்கள் நான்கு ஆண்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என ஏழு பேர் இந்த வெடி விபத்தில் பலியாகியதாக தெரிவிக்கின்றனர்.
இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பட்டாசு வெடி விபத்து குறித்து சாதாரண நகர் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் பட்டாசு ஆலையின் மேலாளர் மற்றும் போர்ன் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், பட்டாசு வடிவத்தில் உயிரிழந்த நபர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.