முதல்வர் ரெங்கசாமி என்.ஆர். காங்கிரஸ் கட்சியை பாரதிய ஜனதா கட்சியில் அடமானம் வைத்து விட்டதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மகிளா காங்கிரஸ் சார்பில், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி..,
புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே இருந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொல்வதற்கு காரணம் என்ன அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதா என்பதை பாஜகவினர் தெளிவு படுத்த வேண்டும். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் பணம் இல்லாமல் பதவி கிடைக்காது என்ற நிலை உருவாகி உள்ளதாகவும். முதலமைச்சர் ரெங்கசாமி என்.ஆர் காங்கிரஸ் கட்சியை பாரதிய ஜனதா கட்சியில் அடமானம் வைத்து விட்டதாக கூறினார். மேலும், காரைக்கால் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 7 முறை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்துள்ளதாக கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என கூறினார்.