மதுரை துவரிமான் அருகில் உள்ள தனியார் சர்வதேச பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சோழவந்தான் மற்றும் மேலக்கால் தாராப்பட்டி கொடிமங்கலம் ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தனியார் பள்ளி ஓட்டுநர் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்போன் பேசியவாறு அதிவேகமாக பேருந்து இயக்கி விபத்து ஏற்படும் சூழ்நிலையில் அஜாக்கிரதையாக இயக்கினார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக பள்ளி பேருந்துகளில் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நிலையில் இவ்வாறு ஆபத்தான முறையில் செல்போன் பேசிக்கொண்டு அதிவேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டுநர் இயக்குவதால் பெரும் விபத்தை ஏற்படும் சூழலும் உருவாகிறது.

ஏற்கனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து துறை காவல் துறையினரும் பள்ளி பேருந்துகள் குறிப்பிட்ட அளவு வேகத்தில் தான் செல்ல வேண்டும் மற்றும் தொலைபேசி பேசியவாறு வாகனங்களை இயக்கக் கூடாது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவசர கதவுகள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பேருந்துகளை சோதனை செய்து பின்னர் தான் பள்ளிகளில் குழந்தைகளை ஏற்ற அனுமதிக்கப்படுகிறது.
பள்ளிப் பேருந்தை செல்போன் பேசிக்கொண்டு அதிவேகமாக ஓட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருவதால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.