திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு விழாவின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் குப்பைத் தொட்டியில் கிடந்ததை அறிக்கையை பார்த்த பிறகு தான் இந்த சம்பவமே எனக்கு தெரிய வந்தது.
இது போன்ற கீழ்த்தரமான அரசியலை திமுக என்றுமே செய்யாது கீழ்த்தரமான செயல்களில் என்றுமே ஈடுபட மாட்டோம் அதிகாரிகள் யாராவது செய்திருப்பார்களே ஒழிய அவர்கள் யாராவது எடுத்துக் கொண்டு போய் வைத்திருக்கலாம் எங்கள் கவனத்திற்கு வரவில்லை அப்படி வந்திருந்தால் அதுபோன்று நடக்க விடமாட்டோம் எல்லாரையும் நாங்கள் மதிக்க கூடியவர்கள் அம்மையாராக இருந்தாலும் சரி மற்ற யாராக இருந்தாலும் சரி ஆண்டு காலங்களாக மின்சார துறை அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் கோட்டம் கொண்டு வந்திருக்கலாம் கொண்டு வந்திருந்தால் அவருக்கு பெருமை அதை கொண்டு வர முடியவில்லை இன்று திமுக ஆட்சி கொண்டு வந்த பிறகு அந்த பொறாமையில் நத்தம் விசுவநாதன் பேசுகிறார் என்று உணவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி..

திண்டுக்கல் மாவட்டம், கோபால் பட்டியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்பொழுது.
வேடசந்தூரில் நடைபெற்ற அரசு விழாவின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை குப்பைத்தொட்டி போட்டதற்கு தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார் அதேபோல் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இச்செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதில்.
தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக வேடசந்தூரில் செயற்பொறியாளர் திறந்து வைக்கப்பட்டது. அதில் நானும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வந்தோம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி விட்டு வந்த பிறகு அதிமுகவினரின் அறிக்கையை பார்த்த பிறகு தான் இந்த சம்பவமே எனக்கு தெரிய வந்தது. இது போன்ற கீழ்த்தரமான அரசியலை திமுக என்றுமே செய்யாது.
ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உருவப்படமும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உருவப்படமும் ஒட்டப்பட்டிருந்த பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகப்பைகளை வழங்கு முன்னர் அதிகாரிகள் முதல் வருடத்தில் இதில் முன்னாள் முதல்வர்கள் படம் இடம்பெற்றிருக்கிறது என்று கூறியதற்கு முதல்வர் தமிழக முதல்வர் புத்தகப் பைகளை மீண்டும் அச்சடித்து வழங்க எவ்வளவு செலவாகும் என்று கேட்டதற்கு 75 கோடி ரூபாய் செலவாகும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து முதல்வர் பெருந்தன்மையுடன் அந்த படங்கள் அப்படியே இருக்கட்டும் விட்டுவிடுங்கள் அவர்களின் படம் இருந்தாலும் பரவாயில்லை பள்ளி மாணவர்களுக்கு அந்த பைகளை கொடுங்கள் என பெருந்தன்மையோடு கூறி நடந்து கொண்டவர் முதல்வர்.
அதனால் அவர் வழியில் வந்த நாங்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம். அதிகாரிகள் யாராவது செய்திருப்பார்களே ஒழிய அவர்கள் யாராவது எடுத்துக் கொண்டு போய் வைத்திருக்கலாம். எங்கள் கவனத்திற்கு வரவில்லை அப்படி வந்திருந்தால் அதுபோன்று நடக்க விடமாட்டோம். எல்லோரையும் நாங்கள் மதிக்க கூடியவர்கள், அம்மையாராக இருந்தாலும் சரி மற்ற யாராக இருந்தாலும் சரி எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி அனைத்து கட்சியினரையும் நாங்கள் அரவணைத்து செல்லக் கூடியவர்கள் அந்தப் பண்பு தலைவர் கலைஞரும் சரி இன்றைய முதலமைச்சரும் சரி எங்களை அப்படித்தான் ஆளாக்கி இருக்கிறார்கள் அப்படிப்பட்ட கீழ்த்தரமான காரியத்தில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு…
அதே போல் நேற்று வாட்ஸ் அப்பில் கூட பார்த்திருப்பீர்களே. AD கூட இடத்தை பார்த்து எப்படி இந்த படத்தை எல்லாம் இங்கு கொண்டு வந்து போட்டீர்கள் என்று சொல்லி அந்த அதிகாரிகளை சத்தம் போட்டதை கூட வீடியோவில் பார்த்திருப்பீர்கள். நாங்கள் எல்லாம் அப்படி செய்யவில்லை.
அதாவது இங்கு இருக்கிற நத்தம் விஸ்வநாதன் மின்துறை அமைச்சராக இருந்தார். அவர் காலத்தில் அந்த கோட்டம் கொண்டு வந்திருக்கலாம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு. கொண்டு வந்திருந்தால் அவருக்கு பெருமை அதைக் கொண்டு வர முடியவில்லை இன்று திமுக ஆட்சி கொண்டு வந்த பிறகு அந்த பொறாமையில் கூட இப்படி பேசலாம். அதேசமயம் 10 ஆண்டுகள் அவர் அமைச்சராக இருந்தார் இந்த நத்தம் தொகுதிக்கு கல்லூரி வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அந்தக் கல்லூரி வந்திருந்தால் எத்தனையோ மாணவர்கள் பத்து ஆண்டுகளாக படித்து பயன் பெற்றிருப்பார்கள்.
இல்லையென்றால் கல்லூரிக்காக மதுரை,திண்டுக்கல், திருச்சிக்கு போக வேண்டிய சூழ்நிலை இருந்தது ஆனால் முதலமைச்சர் இடத்திலே ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் நானும் இந்த ஆண்டு நத்தத்திலேயே கல்லூரி வேண்டும் என சொன்னோம். உடனடியாக எதிர்க்கட்சி என்றும் பாராமல் நத்தம் தொகுதிக்கு மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்று மாணவர்களுக்காக கல்லூரியை கொடுத்தவர் தமிழ்நாடு முதல்வர்.
அதேபோல் முதலமைச்சரின் எண்ணம் திமுக வெற்றி பெற்ற தொகுதியை மட்டும் பார்க்க கூடாது. தோழமைக் கட்சியை மட்டும் பார்க்க கூடாது. 234 தொகுதியும் சீராக வளர்ச்சி அடைய வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திமுகவின் கொள்கை. அதனால் நாங்கள் பாகுபாடு பார்க்க மாட்டோம் அதனால்தான் நத்தத்தில் இன்று கல்லூரி கொண்டு வந்திருக்கிறோம்.
நாங்கள் யாரையுமே எதிர்க்கட்சியாக இருந்தாலும் யாருடைய மனதும் புண்படும்படி என்றைக்கும் நடந்து கொள்ள மாட்டோம் என்று பேட்டியளித்தார்.