கரூரை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பி பழனிச்சாமி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் நகர மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் திமுகவின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்து வந்தார்.

கரூர் மாவட்டம், மாயனூரில் கே சி பி பேக்கேஜிங் லிமிடெட் என்ற பெயரில் பாலித்தீன் பை, சிமெணேட் சாக்கு, ஜம்போ பை உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், அடமானம் வைத்த சொத்துக்களை விற்பனை செய்வதாக வங்கி சார்பில் ஏல அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், கே.சி.பி பேக்கேஜிங் லிமிடெட் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்டோருக்கு சம்பள நிலுவைத் தொகை கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு தான் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பணிபுரிந்து வந்த ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வருங்கால வைப்பு நிதி, கருணைத்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறி இன்று கரூர், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி வீட்டை முற்றுகையிட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் நிலுவைத் தொகை தருவதாக பலமுறை வாக்குறுதி அளித்தும், இதுவரை வழங்கவில்லை என்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.







; ?>)
; ?>)
; ?>)