புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அம்மன்பட்டி கிராமத்தில் உள்ள அற்புத விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர்,முன்னாள் எம்.எல்.ஏ.வும் அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான பிகே.வைரமுத்து கலந்து கொண்டார்.அவருக்கு முருகன் படம் வழங்கி ஊர் பொதுமக்கள் கௌரவித்தனர்.