தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல் முறையீடு செய்து ,
வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணையில் இருக்கும்,
போது கீழ் கோர்ட் உத்தரவை வைத்துக்கொண்டு புதுக்கோட்டை மாநகராட்சியும் நெடுஞ்சாலை துறை காவல்துறையும் சேர்ந்து கொடிக்கம்பகளை புதுக்கோட்டை நகரத்தில் இன்று 29/6/2015 இடித்து வருகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்களை இடிக்க கூடாது
என எங்கள் கட்சியின் மாநகர செயலாளர் தோழர் எஸ் பாண்டியன் தலைமையில் தோழர்கள் புதுக்கோட்டை நகரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திமுக அரசிடம் மார்க்சிஸ்ட் கட்சி கேட்பதெல்லாம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது இப்படி அரசு அதிகாரிகளை
எந்திரகதியாக இடிப்பதற்கு அனுமதிக்கலாமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்கள் எல்லாம் உழைக்கும் மக்களின் ஏழை மக்களின் வியர்வையில் உருவாக்கப்பட்டது என்பதை தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும்
எங்களின் வியர்வையும் உழைப்பையும் நீங்கள் உதாசீனப்படுத்தினால்
எங்களுக்கு போராட்டத்தை தவிர வேறு வழி இல்லை.
தமிழ்நாடு அரசு உடனடியாக உயர்நீதிமன்ற வழக்கில் அரசு தரப்பில் மக்களின் உணர்வுகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து
வழக்காட முன்வர வேண்டும்.
அதை விட்டுவிட்டு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை மீண்டும் மீண்டும் இணைப்போம் என ஜேசிபி எந்திரத்தை நீங்கள் பயன்படுத்தினால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை ஒருபோதும் அனுமதிக்காது இந்நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.