காரைக்கால் மாவட்ட என் ஆர் காங்கிரஸ் தொண்டரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் டாக்டர் சந்திர பிரியங்கா கோப்பை கிரிக்கெட் போட்டி நெடுங்காடு பகுதியில் தொடங்கியது போட்டியை துவக்கி வைக்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிரதிநிதிகளாக தொண்டரணி மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அணி தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சரும் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருமான சந்திர பிரியங்கா இணைந்து போட்டியினை துவக்கி வைத்தார்.

இன்று தொடங்கி வரும்10ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் கிரிக்கெட் போட்டியில் சென்னை காவல்துறை அணி, புதுச்சேரி காவல் துறை அணி, திருவாரூர், திருநெல்வேலி, திருப்பூர், நாமக்கல், வேதாரண்யம், கோயம்புத்தூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்கின்றனர்.
வரும் 10ம் தேதி இறுதிப்போட்டியும் அதற்கான வழங்கப்பட உள்ளது. முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சத்துடன் டாக்டர் சி.சந்திர பிரியங்கா கோப்பையும், இரண்டாம் பரிசு 75,000, மூன்றாம் பரிசு ரூபாய் 50,000, நான்காம் பரிசாக ரூபாய் 30,000 வழங்கப்பட உள்ளது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை எண்ணார் காங்கிரஸ் தொண்டரணி மற்றும் இளைஞர் அணியினர் சிறப்பாக செய்துள்ளனர்.
