விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் அண்ணா நூற்றாண்டு படிப்பகத்தில், படிகள் உயரமாக இருப்பது மற்றும் சேதமடைந்த குடிநீர் தண்ணீர் கசிகின்றது என்பன போன்ற பொதுமக்கள் புகார்களை அடுத்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் உடன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த நூலகத்தைமாணவர்கள், வாசகர்கள் மற்றும் வயதில் முதியவர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.அவர்களின் பாதுகாப்பு மற்றும் அணுகல் வசதிக்காக,
படிகளை சீரமைத்தல் மற்றும் குழாய் பழுது சரிசெய்தல் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.