முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி கின்னிமங்கலம் கிராமத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவி மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
தலைவர்கள் பேச்சுக்கள் முடிந்த உடனேயே 1500 பெண்களும் ஒட்டுமொத்தமாக மேடையில் நலத்திட்ட உதவி வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டு சென்ற பொழுது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கட்சியினர் மைக்கில் கத்தியும் ஒதுங்காத பெண்கள்
பிறகு காவல்துறையினரை அழைத்து பெண்களை கூட்டத்தை கட்டுப்படுத்தி பிறகு வரிசையாக சென்று நலத்திட்ட உதவிகளை வாங்கி சிக்கன் பிரியாணியும் வாங்கி சென்றனர்.
திருமங்கலம் தொகுதி முழுவதிலும் 1.50 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக மக்கள் திமுக சார்பில் நலத்திட்டம் வழங்கியது அடுத்து கின்னிமங்கலம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
