அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் மறைந்த Dr.க. முத்துவின் 7ம் ஆண்டு நினைவேந்த நிகழ்வு புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை அம்பேத்கர் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் Dr.இளமுருகு முத்து மாநில செயலாளர் மெய்யர் மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி மாவட்ட செயலாளர் மனோகரன் மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் அனைத்து மட்ட பொறுப்பாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து தலைமையில் அக்கட்சியினர் மறைந்த நிறுவன தலைவர் Dr.க.முத்து நினைவேந்தலையொட்டி வீரவணக்கம் செலுத்தினர்.