புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சேந்தன்குடி கிராமத்தில் பட்டியலின மக்களின் கோயிலான நொண்டி அய்யனார் கோயிலுக்கு செல்ல கடந்த 50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் இருந்துள்ளது.
அம்மக்களுக்காக ஊராட்சி மன்ற தலைவர் செல்வநாயகத்தின் குடும்பத்தினர் சாலை அமைக்க இலவசமாக நிலம் வழங்கியுள்ளனர்.அந்த நிலத்தில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.6.44 லட்சம் செலவு புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது.அந்த சாலையை இன்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

சாலையை திறக்க வந்து அமைச்சருக்கு அந்தப் பகுதி மக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்ப்பளித்தனர்.
மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக சாலையில் இருபுறமும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
மேலும் விழாவில் பேசிய அமைச்சர் மெய்யநாதன்,நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் காலனி என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்ததாக கிராமப் பகுதிகளிலும் காலணி என்ற பெயர் வருகின்ற தேர்தலுக்குள் நீக்கப்படும் என்றும் இதற்கு தமிழக முதலமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைதான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.