விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆனி மாச சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரர் திருக்கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு காலையில் சடைமுனியாண்டி மற்றும் பாண்டி முனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பாண்டி முனீஸ்வரர் காட்சியளித்தார். பின்னர் விசேஷ தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பூசாரி பாண்டி செய்திருந்தார்.
