புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட நகர்மன்ற கூட்டமானது ஒரு நிலையான நகராட்சி ஆணையர் இல்லாத காரணத்தினால் கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் புதிதாக நகராட்சிக்கு ஆணைய நியமிக்கப்பட்ட நிலையில் இன்று திமுகவின் நகர்மன்ற தலைவர் ஆனந்த் தலைமையில் நகர்மன்ற கூட்டமானது தொடங்கி நடைபெற்று வந்தது.

அப்பொழுது பேசிய அறந்தாங்கி நகராட்சியின் சுயேச்சை நகர்மன்ற உறுப்பினர் விசுவமூர்த்தி என்பவர் அறந்தாங்கி நகராட்சியில் கடந்த 20 இடங்களுக்கு மேலாக குப்பைகள் ஒழுங்காக வாரப்படவில்லை என்றும் குடிநீர் பிரச்சனை தொடர்ந்து இருந்து வருவதாகவும் குற்றம் சட்டி பேசினார். மேலும் குடிநீர் பிரச்சனைக்கு காரணமாக நகராட்சியில் செயல்படும் மின் மோட்டார்கள் சரிவர பயன்படுத்த முடியாமல் இருப்பதாகவும் அதனை பார்க்காமல் அதிகாரிகள் என்ன தவறு செய்தார்கள் என்று கேள்வி கேட்டு வந்தார்.
சுயேச்சை கவுன்சிலர் விசுவமூர்த்தியின் கேள்விக்கு பதில் அளித்து வந்த அதிகாரி பேசவிடாமல் இருப்பதைக் கண்டு திமுகவின் நகர்மன்ற துணைத்தலைவரும் கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதியின் உறவினர் முத்து என்கிற சுப்பிரமணியன் குறுக்கிட்டு நகர்மன்ற உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அந்த அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாதவர் என்றும் அவரை ஏன் இவ்வாறு கேள்வி கேட்கும் பொழுது சுயேச்சை கவுன்சிலர் கூறியதோ அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஏற்ற அதிகாரி போட்டு செயல்படுங்கள் என்றும் இதே காரணம் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது என்றும் பேசினார்.

பல மாதங்களாக நடைபெறாமல் இருந்த நகர்மன்ற கூட்டத்தை இன்று நடந்த பொழுது நகர் மன்ற துணைத் தலைவருக்கும் சுயேச்சை கவுன்சிலருக்கும் சிறிது நேரம் ஏற்பட்ட வாக்குவாதம் அங்கு கூடுதலுடைய பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த கூட்டஅரங்கில் இருந்த அதிமுக தேமுதிக கவுன்சிலர்கள் திமுகவின் அடாவடி தான் தமிழ்நாட்டில் நடக்கிறது அதே போல் அறந்தாங்கி நகராட்சி கூட்டத்திலும் நடக்கிறது என்று முனுமுனுத்தனர்.