உத்தரபிரதேச பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராமலேயே பாஸ் ஆவதைத் தடுக்கும் வகையில், ஆன்லைன் வருகைப் பதிவு அமலாகி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அரசு நிதியும் கிடைக்கிறது. இதற்காக அப்பள்ளிகள் குறிப்பிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்ச்சி விகிதத்தையும் கடைப்பிடிப்பது முக்கியம். இதனால், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை சமாளிக்க பல பள்ளிகள் சட்டவிரோதமாக தவறான முறைகளில் இறங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இதில், ‘கோஸ்ட் முறை’ எனப்படும் பள்ளிக்கு வராமல் சேர்க்கை என்ற முறை பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பள்ளிக்கு வராத மாணவர்கள் சேர்க்கைக்கு பின் ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலைக்கு சேர்ந்து பணியாற்றுகின்றனர். இவர்கள் இறுதி தேர்வுகளில் குறிப்பிட்ட தொகை கொடுத்து தேர்ச்சியும் பெறுவதாகவும் புகார் உள்ளது.
இதே ‘கோஸ்ட் முறை’யில் அப்பள்ளிகளில் ஆசிரியர்களும், அலுவலர்களும் இருப்பதாகவும் தெரிகிறது. இதை சரிசெய்ய உ.பி அரசு அனைவரது வருகையை ஜுலை 1 முதல் ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
உ.பி பள்ளிகளில் ஆன்லைன் வருகைப் பதிவு அமல்
