சோழவந்தானில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிறந்தநாள் விழாவில் மரக்கன்று வழங்கி கொண்டாடப்பட்டது.
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றி கழகம் சார்பாக, தலைவர் விஜயின் பிறந்தநாள் விழா சோழவந்தான் பேரூராட்சி பசும்பொன் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேரூர் நிர்வாகி அன்பில் சுரேஷ், ஒன்றிய நிர்வாகி ராஜேஷ் கண்ணா , வழக்கறிஞர் தியாகராஜன் ஆகியோர் வார்டு செயலாளர் சரவணன் ஏற்பாட்டின் பேரில் மரக்கன்றுகளை வழங்கினர். அஜித் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.