தவெக தலைவரும், நடிகருமான விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மேற்கு மாவட்ட தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் கரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அரவக்குறிச்சி ஒன்றிய பொறுப்பாளர் சதீஷ் ஏற்பாட்டில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தவெகவினர் பலரும் கலந்து கொண்டு அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னர் பகுதியில் சாலையில் தலைகவசம் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் 51 பேருக்கு தலைகவசம் வழங்கினர்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அதனை தொடர்ந்து ஈசநத்தம் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள், பிரியாணி, தண்ணீர் பாட்டிலுடன் இனிப்புகளை வழங்கினர்.