தவெக தலைவரும், நடிகருமான விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மேற்கு மாவட்ட தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் கரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தவெகவினர் பலரும் கலந்து கொண்டு பேருந்து நிலையம் அருகே சாலையில் தலைகவசம் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் 51 பேருக்கு தலைகவசம் வழங்கினர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அதனை தொடர்ந்து லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள், பிரியாணி, தண்ணீர் பாட்டிலுடன் இனிப்புகளை வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், வரும் 2026ம் ஆண்டு தளபதி ஆட்சியில் அமர்வார். தற்போது ஒவ்வொரு நிர்வாகிகளும் கையிலிருந்து காசு செலவு செய்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். அடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்வோம் என்றார்.