• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

Byமதி

Dec 8, 2021

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பெய்த தொடர்ந்து கனமழை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதனால், தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா கடந்த மாதம் அறிவித்தார். ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்றுதேதிகள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுகள் இயக்ககம் இன்று அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வரும் டிச. 14 முதல்  www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.