• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி..,

ByVasanth Siddharthan

Jun 22, 2025

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள சின்ன கோம்பைபட்டியை சேர்ந்த முருகன் என்பவர் (37) திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கும் மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியைச் சேர்ந்த குமார் (55) என்பவருக்கும் நண்பர் மூலமாக முருகன் பழக்கமாகி உள்ளார். அப்போது உங்கள் மகன் சரணுக்கு (21) நான் அரசு வேலை வாங்கி தருகிறேன் என முருகன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி தனது மகன் சரணுக்கு இளநிலை உதவியாளர் பணி வாங்கி தருவதற்காக முருகனிடம் 5 தவணைகளாக குமார் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். 10 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட முருகன் வேலை வாங்கித் தராமல் 5 மாதங்களாக பல பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த குமார் தனது உறவினர்களான பாண்டி , செல்வராஜ், ராஜா, சதீஷ் ,வீர சுந்தர் ஆகியோருடன் முருகனை தேடி வந்து உள்ளனர். இந்நிலையில் முருகன் சாணார்பட்டி மேட்டுக்கடை அருகே சென்று கொண்டிருந்த பொழுது அவரிடம் நைசாக பேசி காரில் அழைத்துச் சென்று உள்ளனர். பின்பு இரண்டு தினங்கள் ஆகியும் முருகன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி பாண்டீஸ்வரி தனது கணவர் காணாமல் போய் 2 தினங்கள் ஆகிறது. எனவே தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாணார்பட்டி காவல்துறையினர் தீவிர தேர்தல் வேடத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்திய பொழுது மதுரை அருகே பொதும்பு பகுதியில் கடத்திச் சென்று வைத்திருப்பதை அறிந்த சாணார்பட்டி காவல்துறையினர் மதுரை சென்று கடத்தப்பட்ட முருகனையும் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்களையும் கைது செய்து சாணார்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையின் போது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பத்து லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு 5 மாத காலமாக ஏமாற்றி வந்த முருகனை பணம் கொடுத்து ஏமாந்த குமார் மற்றும் அவரது மகன் சரண் ஆகியோர் கூறியதை அடுத்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்து உள்ளது. மேலும் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான குமார் மற்றும் அவரது மகன் சரண் தலைமறைவான நிலையில் இருவரையும் சாணார்பட்டி காவல்துறையினர். தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட நபரை கடத்திய சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய குறிப்பு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் பணமோசடியில் ஈடுபட்ட முருகன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சந்திரன் என்பவரிடம் அவரது மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு இதே சாணார்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய மோசடி நபர், பணம் கொடுத்து ஏமாந்தவர்களை சிறைக்கு அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சிறைக்கு உள்ளே பணம் வாங்கி ஏமாற்றியவர் சுதந்திரமாய் வெளியே உள்ளார்.