• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சாலை மறியலினால் பள்ளி மாணவிகள் அவதி..,

ByKalamegam Viswanathan

Jun 21, 2025

விக்கிரமங்கலம் அருகேஎரவார் பட்டி ஊராட்சியில் டாஸ்மாக் கடை அமைக்க அரசு முடிவு செய்து நேற்று காலை 12 மணி அளவில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் புகார் களையும் மனுக்களையும் மாவட்ட ஆட்சியர் உசிலம்பட்டி கோட்டாட்சியர் வட்டாட்சியர் டிஎஸ்பி ஆகியோருக்கு கிராம பொதுமக்கள் மனுக்களை அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் எடுக்காத நிலையில் நேற்று காலை 11 மணியளவில் எரவார்பட்டி அரச மரத்துப்பட்டி தெப்பத்துப்பட்டி பானா முப்பம்பட்டி மணல் பட்டி காந்திநகர் ரெட்டியபட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் அரசு திறப்பதாக கூறியிருந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

இதனால் அந்தப் பகுதியில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த காவல்துறையினர் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல கூறினர். ஆனால் டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம் என எழுதி கொடுத்தால் தான் அங்கிருந்து செல்வோம் என பொதுமக்கள் உறுதியாக இருந்தனர். பின்பு அங்கு வந்த காவல் ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முடிவு செய்து விட்டதால் அதை தடுக்க முடியாது கிராம மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து டாஸ்மாக் கடை திறப்பதற்கு தடை உத்தரவு வாங்கி வந்தால் திறக்காமல் இருப்போம் என பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இதனை ஏற்காத பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் கடையை எக்காரணத்தைக் கொண்டும் திறக்க விடமாட்டோம் எனக் கூறி சாலையில் அமர்ந்தனர்.

உசிலம்பட்டியில் இருந்து விக்கிரமங்கலம் செல்லும் பிரதான சாலை அது என்பதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்திய இடத்திற்கு வந்த வட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் திருப்தி அடைந்த பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.

அங்கிருந்த பெண்கள் பொதுமக்கள் கூறுகையில்,

எக்காரணத்தைக் கொண்டும் டாஸ்மாக் கடை திறக்க விடமாட்டோம் என்று கூறினர் அங்கிருந்த கூலி வேலை செய்யும் பெண் கூறுகையில் டாஸ்மாக் கடையால் எனது கணவரை இழந்து நானும் எனது மகனும் தனியாக வசித்து வருகிறோம். இந்த நிலையில் மேலும் இந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் எனது குடும்பம் நிற்கதியான நிலைக்கு தள்ளப்படும். ஆகையால் எனது உயிரை விட்டாவது டாஸ்மாக் கடை வருவதை தடுப்போம் எனது உயிரை எடுத்து விட்டு கடையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

டாஸ்மாக் கடை அமைக்க வேண்டாம் என கலெக்டர் எஸ் பி தாசில்தார் ஆகிய அனைவரிடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலை 11:00 மணி முதல் தற்போது வரை வெயில் அதிகம் இருக்கும் நிலையிலும் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வரும். எங்களுக்கு இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவுமில்லை ஆறுதல் கூறவும் இல்லை. ஆகையால் டாஸ்மாக் கடை அமைக்கும் அரசு முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இல்லை என்றால் எங்கள் உயிரை விட்டாவது கடை அமைப்பதை தடுப்போம் என ஆவேசமாக கூறினர்.