கரூர் நகர் அருள்மிகு வஞ்சலீஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான பிரம்ம தீர்த்த குளமானது ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது கடந்த 2011 ஆம் ஆண்டு இதனை பார்வையிட்ட திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ஆ இராதாகிருஷ்ணன் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதின் பேரில் மீட்க பட்டு உபயதாரர்களால் சீரமைக்கப்பட்டது

திருக்குளத்தில் மாசடைந்து காணப்பட்டது திருச்செந்தூர் சபை நிறுவனர் ஆ இராதாகிருஷ்ணன் குளத்தில் பல்வேறு மீன்களை விட்டார்
அதனைத் தொடர்ந்து திருக்குளத்தினை பராமரிப்பது குறித்து திருப்பூர் மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் உத்தரவின் பேரில் திருச்சி மண்டல மீன்வளத்துறை உதவி இயக்குனர் அறிவுரையின்படி கரூர் பிரிவு மீன்வளத்துறை ஆய்வாளர் , திருக்கோயில் செயல் அலுவலர் ம.ஆறுமுகம் ஆகியோர் இன்று திருக்குளத்தினை ஆய்வு செய்தனர்

கரூர் மாநகரில் திருக்குளத்தில் மீன்கள் விடப்பட்டது கண்டு பொதுமக்கள் திரளாக குழந்தைகளுடன் வந்திருந்து கண்டுகளித்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.