• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பழனியில் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம்

ByVasanth Siddharthan

Jun 14, 2025

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின்‌ 51வது பிறந்த நாளை முன்னிட்டு பழனியில் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜா ரத்த தானம் வழங்கினார். ஏராளமான பொதுமக்கள்‌ பங்கேற்று சிகிச்சை‌ பெற்றனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உடைய 51வது பிறந்தநாள் வருகிற 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், பழனியில் இரத்த தான முகாம் மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை முகாமும் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலன், பழனி நகர சொயலாளர் மிதுன் தலைமையில் நடைபெற்ற முகாமில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினார்.

முகாமில் தமிழக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரத்த தானம் செய்தனர். தொடர்ந்து முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாமில் பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் த வெ க மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.