திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பிரிவு சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கழிவு பஞ்சு குடோனில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்புகள் துறையினர் விரைந்து தீயணைத்தனர்.


திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் அருகே உள்ள தனியார் பஞ்சு குடோனில் மாலை 3 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ளவர்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் மீட்பு நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டது.
