வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி திருக் கோயிலில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர் கள் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழக சட்டமன்ற அறிவிப்பு, 2023-24ம் ஆண்டின் படி கும்பாபிஷேக திருப்பணிகள் புதிய அன்னதான மண்டபம், கருங்கல் தளம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ. 1 கோடி 30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் துவக்க விழா குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, மராமத்து பிரிவு பொறியாளர் ஐயப்பன், ஸ்ரீ காரியம் ரமேஷ், சிவக்குமார், வாள்வச்சகோஷ்டம் திமுக பேரூர் செயலாளர் சுரேஷ், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர், 6வது வார்டு கவுன்சிலர் ஜேபின் பிராங்கிளின், பாக்கிய சுந்தர், கவின், சேகர், ஒப்பந்ததாரர் மோகன் தாஸ் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
