தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூரில் உள்ள அக்ஷயா முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் முதியோருக்கு முடிச்சூர்- வரதராஜபுரம் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் இரவு உணவு வழங்கி அதன் பின்னர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதில் சங்க தலைவர் கே.வி.ஜெமின், பொதுச்செயலாளர் எஸ்.பவுல்ராஜா,பொருளாளர் பி.ஜே.நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் அர்ச்சுணன்,ராஜி, ராஜசேகர், ஜெபதுரை, ஆனந்தன், பால்வன்னண், தமிழ்மணி, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.