புதுச்சேரி டி.வி. நகரை சேர்ந்தவர் சத்யா, பிரபல ரவுடியான இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரில் சமீபத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் பிரபல ரவுடி சத்தியா கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பெரிய கடை போலீசார் பரிந்துரையின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பிரபல ரவுடி சத்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தனர்.
இதனை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிரபல ரவுடி சத்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.