மதுரை தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் எலியார்பட்டி சுங்கச்சாவடி உள்ளது.இந்த சுங்க சாவடி பராமரிப்பு நிர்வாகத்தை மது கோன் எனும் ஆந்திரா மாநில நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என தடை விதிக்கப்படது.

இந்நிலையில் எலியார்பட்டி டோல்கேட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையானையை நீக்க உத்தரவு பெற்றது .
அதனை தொடர்ந்து இன்று பகல் 12 மணி முதல்மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்க சாவடி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யபடுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அதில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இரு.புறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவும், சாலை பராமரிப்பு பணிகள் முடியும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.