• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கன்னட சூப்பர் ஸ்டார் நடித்த ‘கந்தடா குடி’ திரைப்பட டீசரை. சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு அவரை நினைவுகூறும் சினிமா பிரபலங்கள்..!

கன்னடத் திரையுலகின் சூப்பர்ஸ்டார் என கன்னட மக்களால் கொண்டாப்பட்டு வந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு இந்தியத் திரையுலகினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.புனித் ராஜ்குமார் நடித்துள்ள ‘கந்தடா குடி’ என்ற படத்தின் டைட்டில் டீசர் நேற்று புனித் ராஜ்குமார்அம்மா மறைந்த பர்வதம்மா ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.


புனித் ராஜ்குமார் அண்ணன் ஷிவராஜ்குமார், கேஜிஎப் நடிகர் யாஷ் இருவரும் இந்த டீசரை வெளியிட்டனர். இயற்கை, மண் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் படம் தான் ‘கந்தடா குடி’. அமோகவர்ஷா இப்படத்தை இயக்கி புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் காடுகள், இயற்கைப் பகுதிகளில் அதன் பெருமையைச் சொல்லும் விதத்திலும் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்தப் படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது 2022ம் ஆண்டு படத்தைவெளியிடதிட்டமிட்டுள்ளார்கள்புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி இப்படத்தைத் தயாரித்துள்ளார். கர்நாடகத் திரையுலகத்தைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் பலரும் இந்த டீசரை அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு புனித் ராஜ்குமாரை நினைவு கூர்ந்து வருகின்றனர்