• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 27 பேருக்கு அனுமதி

ByKalamegam Viswanathan

Jun 8, 2025

மதுரையில் நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்தடைந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மதுரை விமான நிலையத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜான், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 27 முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வரவேற்பு அளிக்கின்றனர்.

மதுரை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க விமான நிலையத்தில் 27 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் சீனிவாசன், வானதி சீனிவாசன் MLA, பேராசிரியர் கதலி 3ரசிங்க பெருமாள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட 27 பேர் உள்துறை அமைச்சரை மதுரை மாநிலத்தில் சந்திக்க உள்ளனர்.

மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின்னர் கார் மூலம் சிந்தாமணி சுற்றுசாலையில் உள்ள தனியார் விடுதிக்கு புறப்பட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு z+ பாதுகாப்பு உள்ளதால் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.