புதுச்சேரியில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

இஸ்லாமியர்களின் தியாகத்திருநாளாக பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது, இதையடுத்து புதுச்சேரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில் கடற்கரை காந்தி கடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது,
இதில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்,
பின்னர் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை கூறி அன்பை பரிமாறிக் கொண்டனர்.
உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் சகிப்புத் தன்மையோடும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடும் சகோதரத்தோடும் நீண்ட அன்பை பெற்று வாழ வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.