கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் மாரியம்மன் பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது .
இக்கோயில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே 23ஆம் தேதி வைகாசி திருவிழா கம்பம் நடுதல் உடன் துவங்கியது.

இரு முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, தீமிதி திருவிழா நடைபெற்ற நிலையில் 19ம் நாளான இன்று இரவு பாடையில் இறந்த நிலையில் வருதல், ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துகொள்ளும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.
மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில் இருந்து துவங்கி மாரியம்மன் பகவதி அம்மன் ஆலயம் வரை பக்தர்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக்கொண்டும், இறந்த நிலையில் ஒருவர் பாடையில் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.








