மதுரை மேலமடை சந்திப்பில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது இங்கு இரண்டு வருடங்களாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி (வயது 23) என்பவர் கட்டிட சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை பணியில் இருந்த அவர் வெயிலின் தாக்கத்தால் அங்கு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோடு ரோலர் வண்டியின் அடியில் அமர்ந்து செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆப்ரேட்டர் ரகுமான் அவர் கீழே அமர்ந்திருப்பதை கவனிக்காமல் ரோடு ரோலர் வாகனத்தை இயக்க முற்பட்டபோது அருகே திருமண மஹாலில் திருமண .நிகழ்ச்சியில் நடைபெற்றது அங்கு உள்ளவர்கள் வாகனத்திற்கு அடியில் ஒருவர் அமர்ந்திருக்கிறார் என்று கூச்சலிட்டனர்.
திருமண நிகழ்ச்சியில் அதிக சவுண்ட் உடன் பாடல் பாடி கொண்டிருந்ததால் இருவருக்கும் கேட்கவில்லை . இதை கவனிக்காமல் ரோடு ரோலரை ஆப்ரேட்டர் ரகுமான் இயக்தியதால் அடியில் அமர்ந்திருந்த சூப்பர்வைசர் கருப்பசாமி தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை அறிந்த ரோடு ரோலரை இயக்கிய அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆப்பரேட்டர் தப்பி ஓடி தெப்பகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார் இந்த சம்பவம் தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)