• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நிர்வாகம்..,

ByKalamegam Viswanathan

Jun 4, 2025

மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அதில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலைகள் சீரமைக்க மற்றும் இரு புறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில் இன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மலைராஜ் என்பவர் மதுரையில் இருந்து எலியார்பத்தி சுங்கச்சாவடி வழியாக வந்து கொண்டிருந்தார். நான்கு வழிசாலைகள் தரமற்று இருப்பதால் சுங்க கட்டணம் கட்டுவதற்கு தடை விதித்த நிலையில் சுங்கச்சாவடியை கடக்க முயன்ற போது தடுப்பு அவரது கார் மீது பட்டதில் கார் கண்ணாடி உடைந்தது.

இது குறித்து மலைராஜ் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கேட்டபோது உயர்நீதிமன்ற உத்தரவு நகல் எங்களிடம் வராததால் நீதிமன்ற உத்தரவு வரும் வரை நாங்கள் சுங்க கட்டணம் வசூலிப்போம் என அடாவடியாக தெரிவித்துள்ளனர்.