50 வருட தமிழக அரசியலில் யாரும் செய்யத் துணியாத செய்திடாத செயலை புரிந்த
அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்ன செய்தார் மாண்புமிகு எடப்பாடிK. பழனிச்சாமி எதற்கெடுத்தாலும் சமூக நீதி அரசு, திராவிட மாடல் அரசு என்று பொய் பித்தலாட்ட செய்திகளை கூறி
தலித் மக்களை ஏமாற்றாமல் நமக்கு சமாதானம் தான் முதல் எதிரி நாம் அவர்களை தான் எதிர்கொள்ள வேண்டும் என பொய் பிரச்சாரம் செய்து திராவிட மாடலுக்கு முட்டுக் கொடுக்காமல் சமூக நீதி என்று பொய் சொல்லி ஏமாற்றி கொண்டு இருப்பவருக்கு ஆதரவளித்து தான் சார்ந்த மக்களை மடைமாற்றி எதிர்காலத்தில் தலித் மாடல் அரசு என்ற கனவை மழுங்கடித்து திராவிடத்திடம் மண்டி இடவைத்து ஏமாற்றும் தலைவர்கள் மத்தியில் 50 வருட அரசியல் வரலாற்றில் ராஜ்யசபா தேர்தலில்
இட ஒதுக்கீடு என்று இதுவரை யாரும் பின்பற்றாத சூழ்நிலையில் இதுவரை பகுஜன் சமாஜ் கட்சியை தவிர வேறு எந்தக் கட்சியும் ஆதி திராவிட மக்களுக்கு ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்காமல் ராஜ்யசபா உறுப்பினராக ஆக்காமல் ஏமாற்றிக் கொண்டிருந்த நிலையில் துணிவாக ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு வழக்கறிஞர் தனபால் அவர்களை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்ததன் மூலம் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் ஆதி திராவிட மக்களின் அரசியலில்
புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தார். அதற்காக மீண்டும் ஒருமுறை புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.