சிவகங்கை அருகே காளையார்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோயில் வைகாசி விசாகத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் PR. செந்தில் நாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் கோபி பாசறை செயலாளர் பணக்கரை பிரபு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜாக்குலின் அலெக்சாண்டர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட இக்கோயிலில், வரும் வெள்ளிக்கிழமை அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்ற நிலையில் இன்று கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு வைகாசி விசாக திருவிழா தொடங்குகிறது. இரவு சுவாமி, அம்பாளுடன் காமதேனு, வெள்ளி ரிஷப வாகனத்தில் விதி உலா வருவார்.
10 நாள்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 10 மணிக்கு சுவாமி புறப் பாடு நடைபெறும். தினமும் இரவு 7 மணிக்கு சுவாமி. அம்பாளுடன் அன்னம், கிளி, ரிஷபம், யானை, சிம்மம், குதிரை வாகனத்தில் வீதி உலா வருவார்கள். திருவிழாவின் 5 -ஆம் நாளான புதன்கிழமை திருக்கல்யாண வைபவம்் நடைபெறும். 7 -ஆம் நாளான வெள்ளிக்கிழமை பொய்ப்பிள்ளை, மெய்ப் பிள்ளை ருத்ர நீர்த்தம் நடைபெறும். எட்டாம் நாளான சனிக்கிழமை நடராஜர் அபிஷேகம் நடைபெறும்.
ஒன்பதாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 முதல் 5 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரியாவிடையுடன் சுவாமி. சவுந்திரநாயகி தேரிலும், சப்பரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எழுத்தருள்வர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான திங்கள்கிழமை தெப்பஉற்சவம், ஸப்தாவரண பூஜைகளுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறும்.