சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைந்துள்ளது. அதில் கிடைத்துள்ள 53 பொருட்கள் கையாளுவது மற்றும் ஆவணப்படுத்துவது குறித்து பி எஸ் ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த தமிழ்துறை மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.

மூன்றாம் கட்ட அக அளவில் கிடைத்த உடன் நிலையில் சுடுமண் உருவ பொம்மைகள், சங்கு வளையல்கள் ,வட்ட சில்லுகள், சுடுமண் முத்திரைகள் ,சூது பவளமணி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், ஏராளமான மண்பாண்ட பொருட்கள், தங்க ஆபரணங்கள் உட்பட கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவைகள் தொல்லியல் பொருட்களை பாதுகாப்பது குறித்தும் பொருட்களை சுத்தப்படுத்தி எவ்வாறு கையாளுவது மற்றும் அளவீடு செய்து அதனை ஆவணப்படுத்துவது குறித்து ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படுவதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.