மதுரை மாவட்டம்வாடிப்பட்டி அருகேஅடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி வாடிப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்பெரிய கருப்ப(80) காது கேட்காத வாய் பேசாத முடியாதவர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு வாடிப்பட்டி அருகே அய்யன் கோட்டை பகுதியில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
மேலும் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அவரது உடல் மேல் ஏறி சென்றதால் அடையாளம் தெரியாத படி சிதைந்து குலைந்து போனது. இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.