• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம்..,

BySeenu

May 27, 2025

UPSC தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில் பெரியார் பெயருக்கு பின்பு சாதிய பெயர் குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம்- கேள்வி நகலை கிழித்தெறிந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்…

யுபிஎஸ்சி தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கு தரப்பட்ட தேர்ந்தெடுக்கப்படும் விடைகளில் தந்தை பெரியாரின் பெயரை ராமசாமி நாயக்கர் என்று சாதியை குறிப்பிட்டு அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பெரியார் இயக்கங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு UPSC தேர்வாணையத்தை கண்டித்தும் அந்தக் கேள்விக்கு அளிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்படும் விடைகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கேள்வி நகலை கிழித்தெறிந்து கண்டனத்தை பதிவு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கு.இராமகிருட்டிணன், இந்திய ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் சாதி ஒழிப்பிற்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பெரியாரை இழிவுபடுத்தி விட்டதாகவும் பெரியார் மீது சாயம் பூசுகின்ற வன்ம செயலை சிவில் சர்வீஸ் தேர்வாணையம் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். பெரியாரை சாதிய அடையாளத்திற்குள் அடைக்க வேண்டும் என்று ஆளுகின்ற சங்கீகள் திட்டமிட்டு செயல்படுவதாகவும் மாணவர்கள் மத்தியில் பெரியார் என்று சொன்னால் சாதிய சங்க தலைவர் என்பது போல் என்கின்ற அளவில் இதனை செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் தேர்வு மையத்தில் தேர்வு மாணவர்களுக்கான அறிவிப்பு பலகைகளில் ஹிந்தி மொழியில் இருந்ததாகவும் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை இருக்கின்ற பட்சத்தில் யுபிஎஸ்சி தேர்வாணையம் ஹிந்தியை திணிப்பதாக தெரிவித்தார்.