கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல சமூக வலைதளங்களில் வேலை தேடிக் கொண்டு இருந்தார். அப்பொழுது சமூக வலைதள பக்கமான facebook முகநூல் பக்கத்தில் உக்கரை, குரோசியா, போலந்து மற்றும் செர்பியா போன்ற வெளிநாடுகளுக்கு ஆட்கள் தேவை என விளம்பரத்தை பார்த்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்தப் பெண் அவர்களை தொடர்பு கொண்டார். அதில் குறைந்த செலவில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி உள்ளனர். மேலும் குஜராத் மாநிலத்தில் அமைந்து உள்ள சன்ஸ்டீலர் பிரைவேட் லிமிடெட் என்ற போலி நிறுவனத்தின் பெயரில் அவருடன் ஒப்பந்தம் செய்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த இளம் பெண் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூபாய் 64 லட்சத்தை அனுப்பி உள்ளார். நீண்ட நாட்கள் சென்ற நிலையில் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட அந்த பெண் வேலை குறித்து கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அந்தப் பணத்தை பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கான பணி அனுமதி, விசா , அழைப்பிதழ்கள் மற்றும் தொடர்பு உடைய ஆவணங்களுக்கு இந்த பணம் செலுத்தப்பட்டதாக கூறி உள்ளனர். மேலும் அவர்களை தொடர்பு கொண்ட போது, தொடர்பு கொள்ள முடியவில்லை, இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம் பெண் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் துறையின் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முகமத் இர்பான் சேக் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.








