• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டாக்டர் சரவணன் தங்கத்தேர் இழுத்து வழிபாடு..,

ByKalamegam Viswanathan

May 23, 2025

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும், 2026 -ல் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி கழக மருத்துவர் அணி இணைச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர். சரவணன் ஏற்பாட்டில் ,அழகர் கோவில் உள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தங்க தேரினை இழுத்து வழிபட்டனர்.

நிகழ்ச்சியில், கழக மருத்துவர் அணி துணைச்செயலாளர் விஜயபாண்டியன்,
கழக இலக்கிய துணை செயலாளர் ஆர்.கே.ரமேஷ், முனிச்சாலை சரவணன், ராமசுப்பு, செழியன், சூரியகண்ணு, ராமகிருஷ்ணன், நேரு நகர் கணேசன், எம்.எஸ் சுப்பு, வைகை பாலன், முத்துப்பாண்டி, மகளிரணி பாண்டிச் செல்வி, உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.