விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் நத்தம்பட்டி குறுவட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து, நத்தம்பட்டி குறுவட்டத்திற்கான ஜமாபந்தி கணக்குகள் விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது.
மேற்படி நிகழ்வில், வத்திராயிருப்பு வட்டாட்சியர் (பொறுப்பு )எம். ரங்கசாமி, துணை வட்டாட்சியர்கள், கார்த்திக், ரவி, மற்றும் கலைச்செல்வி, குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், பாலமுருகன், இராமகிருஷ்ணன் மற்றும் சுந்தர்ராஜ் மற்றும் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் குறிப்பிட்ட ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொது மக்களிடமிருந்து 70 மனுக்கள் பெறப்பட்டன.
மேற்படி நிகழ்வில், முதியோர் ஓய்வூதியம் நான்கு நபர்களுக்கும், பட்டா மாறுதல் இரண்டு நபர்களுக்கும் மற்றும் குடும்ப அட்டை மூன்று நபர்களுக்கும் ஆக மொத்தம் ஒன்பது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் ஜமாபந்தி அலுவலரால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டு மகிழம்பூ மரக்கன்றுகள் நடப்பட்டன.