மதுரை திருமங்கலம் அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டன. இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் கூடக்கோவில் காவல் நிலையம் அருகில் உள்ள பாறைக்குளம் கிராமத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. மாரிச்சாமி (வயது 53) முன்னாள் ராணுவ வீரர் இருவர் காயம். கணவன், மனைவி பிரச்சனையில் குடும்ப சண்டையில் ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவ வீரர் முத்துச்சாமி துப்பாக்கி எடுத்து சுட்டுள்ளார். அதில் காயமடைந்த இருவர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கூடக் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அவரிடமிருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு, அதற்கான லைசன்ஸ் கிடையாது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உதயகுமார் (வயசு 40), கிஷோர் (வயது 12 )
கிஷோர் என்பவருக்கு தோள்பட்டையில் காயம் இருவர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காயமடைந்து மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை நடைபெற்று வருகிறது.








