கோவையில் முறையான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த 13 வங்கதேச நாட்டினரை மாநகர போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காளப்பட்டி பகுதியில் உள்ள ஆர்.ஓ டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த 13 பேரும் வந்து சேர்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் அராபத், பொனய், தெதர், ஜமிர், ஜாடன், ரஹிப், பப்லு, அல்தாப், ரசல், அலாமின், சொரிப், சோயோன் மற்றும் சொஹக் ஆவர்.
கைது செய்யப்பட்ட 13 பேரிடமும் அவர்கள் இந்தியாவிற்குள் எப்படி ? வந்தார்கள், இவர்களுக்கு உதவியவர்கள் யார் ? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





