ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடத்தி முடித்த பாரத தேசத்தின் முப்படை வீரர்களுக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் இன்று நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி தேச ஒற்றுமை பேரணி நடைபெற்றது .

காஷ்மீர் பாஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றது.
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடத்தி முடித்த நமது பாரத தேசத்தின் முப்படை வீரர்களுக்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் 140 கோடி மக்களும் ராணுவத்தின் பின்னால் இருப்பதை உணர்த்தும் வகையில் பாரத தேச மக்களின் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏந்தி தேசிய ஒற்றுமை பேரணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று நீலகிரி மாவட்டம் பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தர்மன் தலைமையில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடத்தி முடித்த தேசத்தின் முப்படை வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் இன்று உதகையில் சேரிங்கிராஸ் முதல் ஏடிசி திடல் வரை தேசியக் கொடியேந்தி தேச ஒற்றுமை பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் பாஜக மகளிர் அணி, நகர நிர்வாகிகள் மற்றும் நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கத்தினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.





