• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேமுதிகவிற்கு 2026 பொற்காலமாக இருக்கும்..,

ByS. SRIDHAR

May 14, 2025

புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள வந்த தேமுதிக கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளரிடம் பேசுகையில்,

2026 தேர்தலில் தேமுதிக சார்பில் அதிக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு சென்று பேசுவார்கள். கடந்த காலங்களில் கேப்டன் இருக்கும்போது எவ்வாறு எம்.எல்.ஏக்கள் சட்டசபைகளுக்கு சென்றார்களோ அதே போன்று தேமுதிக சார்பில் 2026 தேர்தலிலும் அதிக அளவில் தேமுதிக சார்பில் எம்எல்ஏக்கள் செல்வார்கள்

கூட்டணி தொடர்பாக பொதுச் செயலாளர் உரிய நேரத்தில் அது குறித்து அறிவிப்பார்கள். விஜயகாந்தின் மகன் என்பதால் அதிக அளவு மக்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தற்போது இளைஞரணி செயலாளராக பதவி உயர்வு பெற்ற பிறகும் என் இடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிக அளவு பொதுமக்களிடமும் நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்த் தான் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்று முதன் முதலில் அறிவித்தார். தற்போது பல மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

தேர்தல் தொடர்பாக அனைத்து வேலைகளையும் தேமுதிக செய்து வருகிறது
மிகப்பெரிய மாநாடு விரைவில் நடக்க உள்ளது.

விஜய் எங்களுக்கு எதிரி கிடையாது. விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த விதமான பேச்சுவார்த்தையும் இதுவரை நடக்கவில்லை.

தேமுதிகவை தோற்றுவித்து விஜயகாந்துக்கு எப்படி செல்வார்கள். அதே போன்று செல்வாக்கு தற்போது விஜய்க்கு ஏற்பட்டுள்ளது அவர் பின்னாலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்

திமுக நான்காண்டு ஆட்சியில் நிறைய உள்ளது குறையும் உள்ளது.
அனைத்தும் சூப்பர் என்று கூறிட முடியாது அனைத்தும் ஒன்றுமில்லை என்று கூற முடியாது அடுத்த தடவை மக்கள்தான் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும்

எம்ஜிஆர் போன்று தனக்கும் செல்வாக்கு உள்ளது என்று விஜய் கூறி வருகிறது. குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் அது அவருடைய நம்பிக்கை அடுத்த தேர்தலில் தான் இது குறித்து முடிவு வரும்.

2026 தேர்தல் கடந்த காலங்களைக் கொண்டு தேமுதிகவிற்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து பொய் பிரச்சாரங்களையும் தாண்டி தேமுதிக மக்கள் நம்புகிறார்கள். தேமுதிகவிற்கு 2026 பொற்காலமாக இருக்கும். ராஜ்ய சபா சீட்டு தொடர்பாக என்ன நடந்தது என்று அதிமுகவின் எங்களுக்கும் தெரியும்.