ரகுபதி கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் கனிமவள கொள்ளை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் காணொளி காட்சி மூலமாகவும், ஆஜராகலாம். விசாரணை உண்மை தன்மை குறித்து, நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் எந்த விதமான கட்டுப்பாடும் அச்சுறுத்தலும் அவருக்கு எந்த தரப்பில் இருந்தும் கொடுப்பதற்கு அரசு அனுமதிக்காது. அச்சமின்றி அவர் நீதிமன்றத்தில் தன்னுடைய விசாரணை அறிக்கை குறித்து கூறலாம்.
கட்டுமான பொருட்களான ஜல்லி எம்சாண்ட் பிசாண்ட் ஆகியவை நீதிமன்ற தீர்ப்புப்படி தான் தற்போது உயர்த்தப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்களில் நடக்கிறது மீண்டும் குறைப்பதற்கு வாய்ப்பு இருந்தால் பொருட்கள் நிலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மீண்டும் தமிழகத்தில் மணல் எடுப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறதோ அதன்படி அரசு நடவடிக்கை எடுக்கும். புதுக்கோட்டையில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி..,
புதுக்கோட்டையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி,மெகா அறக்கட்டளை ஆகியவை இணைந்து புதுக்கோட்டை தமி. கவிநாடு கண்மாய்தூர் வாரும் பணியை கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மேயர் திலகவதி செந்தில் மற்றும் வைரம் நிறுவனங்களில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கவிநாடு கண்மாய் என்பது 1200 ஏக்கர் பரப்பளவில் ஆனது கடந்த காலங்களில் இங்கு தேக்கி வைக்கப்பட்ட நீர் தான் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது தற்போது ஏழு மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கவி நாடு கண்மாயில் தான் காவேரி நீரை சேர்த்து வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கவிநாடு கண்மாய் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு குறுக்காடுகள் அமைக்கும் பணி அனைவரையும் பாராட்டு பெற்றுள்ளது.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி..,
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் விலை இருந்தால் மீண்டும் குறைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கும் மக்களுக்காக தான் அரசு உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிம வளங்கள் துறைக்கு நான் பொறுப்பேற்ற பிறகு அதிகாரிகளை அழைத்து முதலில் கூட்டத்தை நடத்தி விலை குறைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வு செய்து செய்துள்ளேன்.
நான் அதிமுகவில் இருந்தவரை தலைமைக்கு விசுவாசமாக தான் இருந்துள்ளேன்
இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. அன்றைக்கும் நான் விழித்திருந்தேன் இன்றைக்கும் நான் விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி தான் எல்லாவற்றையும் மறந்து விட்டு தூங்கிக் கொண்டுள்ளார்
2026 திராவிட மாடல் 2.0 ஆட்சி நடைபெற உள்ளது. 2.0 எவ்வாறு நடைபெறப் போகிறது என்பது குறித்து, ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். வெற்றிகரமாக ஆட்சி நடத்துவதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.
தற்போதைய ஆட்சி மீது பொதுமக்களுக்கு அதிருப்தி கிடையாது. ஒரு சிலர் அதிரத்தில் இருப்பது போன்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். களம் நிலவரத்தை பார்க்கின்ற போது எந்த விதமான அதிரத்தையும் இந்த ஆட்சிக்கு கிடையாது அதிருப்திகான எந்த வாய்ப்பும் நாங்கள் தரவில்லை. தமிழகத்தில் இருக்கும் யாரும் பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டார்கள்.