• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விஜயபாஸ்கர் தலைமையில் ரத்ததான முகாம்..,

ByS. SRIDHAR

May 11, 2025

அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் ரத்ததான முகாம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக கழகப் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தான முகாம் கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை ஒன்றிணைந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் அவர்களின் ஏற்பாட்டின் 50 இளைஞர்கள் ரத்தத்தை தானமாக வழங்கினார்கள்.

இந்த ரத்ததான முகாமிற்கு முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் மாநகர டாக்டர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் சதன் பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டார்.

பின்னர் தலைமை கழகத்திலிருந்து மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் தலைமை கழகத்தில் இருந்து கானொளி காட்சியில் பேசினார்கள்.

இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் “தற்போது எல்லையில் இந்தியா ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் தீவீரவாதிகளிடமிருந்து எல்லையை காத்து வரும் நிலையில் ராணுவத்திற்கு பயன்படும் வகையில் இந்த இரத்த தான முகாமை வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் பிறந்த நாளில் ஏற்பாடு செய்த கழக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கும் இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ராணுவ வீரர்கள் எல்லையை காப்பது போல தமிழகத்தை இன்னும் பத்து மாதங்களில் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடியார் பாதுகாப்பார்” என்றும் பேசினார். இந்த நிகழ்வை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் பேசினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட கழக அவைத் தலைவர் ராமசாமி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் MTR.தமிழரசன், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் பாறை சிவா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், நார்த்தாமலை ஆறுமுகம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுமன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அன்னலட்சுமி, ஒன்றிய செயலர்கள் சுப்பையா, முத்தமிழ்செல்வன், நாகராஜ், அண்ணாதுரை, ராமநாதன், நகர செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர், இந்த நிகழ்ச்சியை திருச்சி மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன் மற்றும் மண்டல இணைச்செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினார்.