தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டிய ரேஷன் பொருட்கள் கள்ள மார்க்கெட்டில் கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பகீர் குற்றச்சாட்டு, அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா திட்டங்களை நிறுத்திய பெருமைக்குரிய அரசு திமுக அரசு எனவும் பேச்சு,

விருதுநகர் மாவட்டம் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்காத திமுக அரசு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு. சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் நடைபெற்ற அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி சிறப்புரை ஆற்றினார். அப்போது.,
இன்றைய திமுக ஆட்சியில் மக்களுக்காக எதுவும் நல்லது நடக்கவில்லை, கெடுதல் மட்டுமே நடக்கிறது.
ரேஷன் கடையில் அரிசி பருப்பு மண்ணெண்ணெய்உள்ளிட்ட எதுவுமே வழங்கப்படாமல் கள்ள மார்க்கெட்டில் கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆயிரத்தில் நூறு பேருக்கு மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மண்ணெண்ணெய் கள்ள சந்தையில் அதிக பணத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் கடையில் துவரம் பருப்பு விற்பனையே கிடையாது.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், திருமண உதவித்திட்டம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்தி உள்ளது.
அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா திட்டங்களை நிறுத்திய பெருமைக்குரிய அரசு திமுக அரசு. கொடுத்த அரசாக திமுக அரசு இல்லை மாறாக கெடுத்த அரசாக தான் செயல்பட்டு வருகிறது.
ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் கெடுத்த அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
திமுக அரசு இருக்கும் வரை இல்லாத மக்கள் கஷ்டப்படுவதை மாற்ற முடியாது.
திமுக மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகையை கொடுத்துவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குடும்ப செலவை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. மின் கட்டணம், வரி கட்டணம் ஆகியவற்றை ஆண்டுதோறும் உயர்த்தி வருகிறது .
விலைவாசி விஷம் போல் உயர்ந்ததற்கு காரணம் ஆட்சி நடத்தத் தெரியாத திமுக அரசின் நிர்வாக திறன் தான் காரணம். இந்த நிலை மாற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்றார்.